Manikandan : ரஜினி பட இயக்குநருடன் கைகோர்க்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • February 17, 2024 / 12:04 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ‘காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘குட் நைட்’ என்ற படம் கடந்த ஆண்டு (2023) ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ்வர்’ திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மணிகண்டன் நடிக்கப்போகும் புதிய படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘கபாலி, காலா’ படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் இயக்குநர் யார்? என அறிவிக்கப்படுமாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus