பாலிவுட்டில் பல பாராட்டுகளை குவித்த லுங்கி டான்ஸை அறிமுகம் செய்தது நட்டிதான் என்ற உண்மையை பிரபல இயக்குனர் சுஜித் சர்கார் வெளியிட்டுள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான (நட்டி )நட்ராஜ் , தனது வித்தியாசமான கதை தேர்வின் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். இவரும் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யபும் ட்விட்டர் தளத்தில் விவாதித்து வந்தனர்.
அனுராக் காஷ்யப் சுயநலவாதி , நன்றி மறந்தவர் என்று நட்டி குறிப்பிட்டிருந்தார். அதற்கு அனுராக் கஷ்யப் மன்னிப்புக் கோரி டிவிட் செய்திருந்தார். மேலும் அவர் நட்டி தனக்கு நண்பர் மட்டுமல்ல ஒரு நல்ல ஆசானும் கூட என்று குறிப்பிட்டிருந்தார்.
நட்டியும் அனுராக் கஷ்யபும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இவர்கள் ட்ரெயின் டு மகாகாளி, பான்ச், பிளாக் பிரைடே போன்ற படங்களில் ஒன்றாக பணியாற்றினர். பிளாக் பிரைடே திரைப்படமே இவர்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்த கடைசிப்படமாகும் .
அனுராக் கஷ்யப் மன்னிப்புக் கோரி டிவிட் செய்ததை அடுத்து இயக்குனரான சுஜித் சர்கார் தனக்கும் நட்டி பெருமளவில் உதவி செய்துள்ளதாகவும் , அதை அவர் என்றும் மறக்க மாட்டார் எனவும் கூறினார். மேலும் லுங்கி டான்ஸை அவர்தான் கண்டுபிடித்தார் எனவும் குறிப்பிட்டார்.
இந்த லுங்கி டான்ஸ் பாடல் ஷாருக்கான் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் வெளியானது. இந்த பாடல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கௌரவம் செய்யும்விதமாக எடுக்கப்பட்டது. இந்நிலையில் இதை நட்டி தான் கண்டுபிடித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.