அஜித் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம்

  • November 16, 2022 / 03:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் லைக்கா நிறுவனம் தற்போது புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது . சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்க உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க தற்போது 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் அஜித்தின் துணிவு படத்தை வெளிநாட்டில் திரையிடம் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கி உள்ளது . துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை எந்த ஒரு வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் வாங்க முன்வரவில்லை என்கிற செய்தி ரசிகர்களுக்கு வருத்தம் அளித்த நிலையில் தற்போது இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus