பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் கபிலன். இவர் ‘தில்’ படத்தில் ‘உன் சமையல் அறையில்’, ‘யூத்’ படத்தில் ‘ஆல்தோட்ட பூபதி’, ‘தூள்’ படத்தில் ‘ஆசை ஆசை’, ‘திருமலை’ படத்தில் ‘வாடியம்மா ஜக்கம்மா’, ‘கில்லி’ படத்தில் ‘அர்ஜூனர் வில்லு’, ‘மதுர’ படத்தில் ‘மச்சான் பேரு மதுர’, ‘அஞ்சான்’ படத்தில் ‘காதல் ஆசை’, ‘சைக்கோ’ படத்தில் ‘உன்ன நினைச்சு’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை ‘பீயிங் வுமன்’ என்ற இணைய இதழை நடத்தி வந்தார். மேலும், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகரும், இயக்குநருமான சேரன் உட்பட சில பிரபலங்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று கபிலனின் மகள் தூரிகை (வயது 27) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் தான் தூரிகை இம்முடிவை எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. தற்போது, தூரிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.