“மாநாடு படத்துக்காக அந்த விஷயத்தை செய்து தான் 27 கிலோ எடையை குறைத்தேன்”… 2 மாதங்கள் கஷ்டப்பட்ட STR!
November 23, 2021 / 05:42 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீசர், 2 ட்ரெய்லர்கள் மற்றும் 2 பாடல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.
படத்தை வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இந்த படத்தில் நடிப்பதற்காக நான் 27 கிலோ எடையை குறைத்தேன். அதற்காக தொடர்ந்து 2 மாதங்கள் நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.