பொங்கலுக்கு சிலம்பரசன் கொடுக்கப்போகும் ட்ரீட்… ‘மாநாடு’ மோஷன் போஸ்டர் ரிலீஸ் ப்ளான்!

  • January 11, 2021 / 11:08 AM IST

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன், மாநாடு, மஹா, பத்து தல’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு பொங்கல் ஸ்பெஷலாக ஒரு சிறப்பான ட்ரீட் கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக மாலை 4:05 PM-க்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனால் சிலம்பரசனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இதே நாள், சிலம்பரசன் – சுசீந்திரன் காம்போவில் தயாராகி உள்ள ‘ஈஸ்வரன்’ படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus