“தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?”… ‘தி ஃபேமிலி மேன் 2’-வை பார்த்து கடுப்பான ‘மாநாடு’ தயாரிப்பாளர்!
June 5, 2021 / 07:40 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் நேற்று (ஜூன் 4-ஆம் தேதி) ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார்.
இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். தமிழர்களுக்கெதிரான இந்த இணையத்தொடரைத் தடைசெய்ய சட்டரீதியாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்று திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது, இந்த வெப் சீரிஸ் தொடர்பாக சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் “எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்… உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். #நம்வரலாற்றைநாமேஎழுதுவோம்” என்று கூறியுள்ளார்.
எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்… உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். #நம்வரலாற்றைநாமேஎழுதுவோம்.