சிம்புவுக்கு நன்றி கூறியுள்ள மாநாடு படத்தின் தயாரிப்பாளர்!
August 20, 2020 / 06:52 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரண்டு தினங்களுக்கு முன் பிறந்தநாளை கொண்டாடினார். இவர் பிறந்தநாளுக்கு பல்லாயிரக்கணக்கான வாழ்த்துகள் குவிந்ததாம். இதில் பெரும்பாலானவை நடிகர் சிம்புவின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ” எனது பிறந்த நாளை சிறப்பாக ஆக்கிய சிம்புவின் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நான் சிம்பு என்ற ஒரு சகோதரனோடு இந்த படத்தை தொடங்கினேன் இப்போது எனக்கு பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நன்றி மட்டும் கூறினால் போதாது மாநாடு திரைப்படம் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். எத்தனை தடைகள் வந்தாலும் மாநாடு படத்தை வெற்றிகரமாக தருவேன் என்று உறுதியளிக்கிறேன். இணைந்தே வெல்வோம். தயாரிப்பாளரான எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி நன்றி” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.
“மாநாடு” திரைப்படத்தில் சிலம்பரசன், பிரேம்ஜி அமரன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.