திரையுலகில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு ராம் கோபால் வர்மா இயக்கிய தெலுங்கு படமான ‘பிரஸ்தானம்’-யில் முக்கிய ரோலில் நடித்தார் சந்தீப் கிஷன்.
இதனைத் தொடர்ந்து ‘சிநேக கீதம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு சந்தீப் கிஷனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘யாருடா மகேஷ், மறந்தேன் மன்னித்தேன், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசட தபற, மைக்கேல்’, தெலுங்கு மொழியில் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், ரா ரா கிருஷ்ணய்யா, டைகர், ரன், நக்ஷத்ரம், தெனாலி ராமகிருஷ்ணா BA. BL, A1 எக்ஸ்பிரஸ்’ என படங்கள் குவிந்தது.
இப்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.21 கோடி என தகவல் கிடைத்துள்ளது.