‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக்… வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ டீசர்!

  • May 25, 2023 / 07:26 PM IST

பாலிவுட் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி ஹிந்திக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாநகரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது, இந்த படம் ஹிந்தியில் ‘மும்பைகர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இதில் விக்ராந்த் மாஸ்ஸி, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சச்சின் கெடேகர், ஹிருது ஹாரூன், தன்யா மணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூன் 2-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜியோ சினிமா’வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus