வெளியான ‘மாறா’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் இணைந்து “மாறா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் இந்த திரைப்பட குழு இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த படம் வெளியிடப்படும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி அமேசான் பிரைம் எனும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று திரைப்பட குழு அதிகாரபூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

திலீப் குமார் இயக்கத்தில் பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சார்லி படத்தின் கதையை கொண்டுள்ளது.

தற்போது இந்த திரைப்படத்தில் வர உள்ள ஓ அழகே என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது இந்த படத்தில் வெளியான மூன்றாவது சிங்கிள் ஆகும்.

Share.