‘மாவீரன்’ ஹீரோயின் அதிதி ஷங்கரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • July 8, 2023 / 12:06 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மகள் அதிதியும் சமீபத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கினார். அதிதிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியுடன் தான். அது தான் ‘விருமன்’ திரைப்படம்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கியிருந்தார். இதனை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்திருந்தார்.

இப்போது அதிதி ஷங்கர் ‘மாவீரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜூலை 6-ஆம் தேதி) நடிகை அதிதி ஷங்கரின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus