தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் மாதவன், தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மதிப்பெண்களை வெளியிட்டு “தேர்வு முடிவுகள் வெளியான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறாத மாணவர்களே, என் தேர்வு மதிப்பெண்கள் 58% மட்டும்தான். ஆட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என் நண்பர்களே கவலை வேண்டாம்” என்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் மாதவன் “ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” என்ற படத்தை தானே எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இந்த படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்திலும் திலிப் குமார் இயக்கத்தில் “மாறா” என்ற படத்திலும் நடித்து வருகிறார் மாதவன்.
இந்த லாக்டோன் முடிந்ததும் மீதமுள்ள இந்த படத்தின் வேலைகள் முடிக்கப்படும் என்று செய்தி வந்துள்ளது.
“ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” எனும் திரைப்படம் ISROவை சேர்ந்த முன்னாள் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள கதையை கொண்டுள்ளதாம். இந்தப் படத்தில் நடிகர் மாதவனோடு சிம்ரன் மற்றும் ரவி ராகவேந்திரன் நடிக்கிறார்கள். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரின்ஸ்டன், ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாம்.