‘ராக்கெட்ரி’-க்காக மாதவனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

  • August 1, 2022 / 11:10 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. சமீபத்தில், மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மாதவனுடன் இணைந்து சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் சூர்யா (தமிழ் வெர்ஷன்) மற்றும் ஷாருக்கான் (ஹிந்தி வெர்ஷன்) நடித்திருந்தார்கள். திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோ பிக்கான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிகர் மாதவனை நேரில் அழைத்து பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பின் போது இவர்களுடன் நம்பி நாராயணனும் உடன் இருக்கிறார். இந்த தகவலை மாதவனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus