தனது புது லுக்கில் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மாதவன்!

  • November 4, 2020 / 10:21 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் தனது நடிப்பால் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் எந்த லுக்கில் வந்தாலும் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம்.

தற்போது மாதவன் வெளியிட்டுள்ள புது லுக் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு தான் ‘2 கிலோ முடி எடையை குறைந்து’ள்ளதாக நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தற்போது நடிகர் மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் இணைந்து “மாறா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக செய்தி வெளியானது.

இதுமட்டுமின்றி இவர் “ராக்கெட்ரி த நம்பி எபெக்ட்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இவரே தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தன் புது லுக் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகர் மாதவன்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus