மஹா படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஹன்சிகா தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தை இகோர் இயக்குகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்து மகா படம் வருகின்ற ஜூலை மாதம் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த படத்தில் நடிகர் சிம்பு 40 நிமிடம் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

மஹா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்து அதில் பங்கேற்று பேசிய ஹன்சிகா
‛மஹா’ படம் வெளியாவதில் சில காலம் தாமதமாகிவிட்டது. இனி அடுத்தடுத்து என் படங்கள் வெளியாகும். விரைவில் 60வது படம் வெளியாகும். 105 மினிட்ஸ் படத்தில் நான் மட்டுமே நடித்துள்ளேன். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக 20 நாட்களுக்கும் மேலாக ஒத்திகை நடந்தது. இது ஹாரர் த்ரில்லர் படம். ஒரு ஷாட் முடிவதற்குள், அடுத்த ஷாட்டுக்கு நானே ஓடிப்போய் அந்த காட்சிக்கு ஏற்ப தயாராக வேண்டும் என்று கூறி இருந்தார் .

இந்நிலையில் மகா படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது .மகா படம் முதல் நாளில் 0.30 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .

Share.