தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தமிழிலும் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.
மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா தெலுங்கில் 350 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் தமிழில் விக்ரமின் ‘கந்தசாமி’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 14-ஆம் தேதி) திடீரென நடிகர் கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது, சிகிச்சை பலனின்றி நடிகர் கிருஷ்ணா (வயது 80) இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.