ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம் மகேஷ்பாபுவுடன்…!

  • April 18, 2020 / 07:50 PM IST

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வரும் ராஜமௌலி தன்னுடைய அடுத்த ஹீரோ மகேஷ்பாபு தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட படங்களுக்கு பிரபலமானவர் ராஜமௌலி. பாகுபலி, மகதீரா, நான்’ஈ’ போன்ற படங்கள் மூலமாக இந்நிய அளவில் ரசிகர்களை ஈர்த்த அவர், தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இரத்தம், ரணம், ரௌத்திரம் என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தாயாராகி வருகிறது. இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர்.

Mahesh Babu's Many Years Dream Came true1

தன்னுடைய ஒரக்கிங் ஸ்டைலுக்கு ஒத்துவரும் பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், நானி,சுனில் ஆகியோருடன் பணியாற்றிய அவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது அனைத்து இந்திய ஹீரோக்களின் ஆசையாகும். பல ஹீரோக்கள் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் இருந்து வந்தனர்.

2021 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ஆர்ஆர்ஆர் படம் வெளியாகவுள்ள நிலையில், ராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மகேஷ்பாபுவுடன் தான் அடுத்தப்படம் என ராஜமௌலி உறுதி செய்துள்ளார். வீடியோ காலிங் மூலமாக தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த போது, தனது அடுத்த படம் பற்றி பேசியுள்ள அவர், மகேஷ்பாபு படத்தை பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயனா தயாரிப்பதாக தெரிவித்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus