கேப்டன் பதவிக்கு போட்டியிட உள்ள மைனா மற்றும் ராபர்ட் !

  • November 5, 2022 / 01:32 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரம் ஆகிவிட்டது . இந்த வார டாஸ்கில் போட்டியாளர்கள் அந்த தொலைக்காட்சி , இந்த தொலைக்காட்சி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர் . பல நடன நிகழ்ச்சிகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , ராசி பலன்கள் என இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .

போட்டியின் இறுதியில் மைனா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இதன் மூலம் இவர்கள் அடுத்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வந்துள்ளது . மேலும் விக்ரமன் மற்றும் ரட்சிதா நடித்த நாடகமும் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus