சமீபத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனுஷ் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது அவருடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் “D43” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்தி வந்துள்ளது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
We are very happy to welcome the gorgeous & talented @MalavikaM_ to our team of #D43 💥