“என்னுடைய FDFS அனுபவம் ரஜினியின் பேட்ட திரைப்படம் தான்”- மாளவிகா மோகனன்

  • October 20, 2020 / 10:46 PM IST

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.

இவர் தனது FDFS அனுபவம் குறித்து பகிர்ந்த போது, தான் முழுக்க முழுக்க மும்பையில் வளர்ந்த பெண் என்றும் அதனால் அங்கு எப்பொழுது ரஜினி படம் வந்தாலும் மறக்காமல் தியேட்டரில் சென்று பார்த்து விடுவார் என்றும் தனது முதல் FDFS அனுபவம் சென்னையில் நடிகர் ரஜினியின் “பேட்ட” திரைப்படம் தான் என்றும், அது சொல்ல முடியாத அளவு தனக்கு மகிழ்ச்சியான அனுபவம் என்றும் கூறியிருக்கிறார்.

என்னதான் ஹாலிவுட் படங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரது திரைப்படங்களில் முதல் நாள் முதல் ஷோ எப்பொழுதுமே ஸ்பெஷல் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்காகவே தான் “மாஸ்டர்” படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாகவும், கண்டிப்பாக இந்த திரைப்படத்தை தனது கேங்குடன் சென்று FDFS பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இவர் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus