தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.
இவர் தற்போது தான் இதுவரை சென்ற பைக் ட்ரிப் அனுபவங்களைப் பகிர்ந்து தற்போது உள்ள நிலைமை சரியாகி மீண்டும் இப்படி பயணம் செய்ய ஆவலாக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இவர் பைக் ஓட்டுவது போன்ற புகைப்படமும் இருக்கிறது இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CGZbflBgr-R/?igshid=1pr9i2knx0t1e
https://www.instagram.com/p/CGZbflBgr-R/?igshid=14quu1jyy90c5
https://www.instagram.com/p/CGZbflBgr-R/?igshid=1clejufp1p127