பாலிவுட் நடிகருடன் ஜோடி சேர உள்ள மாளவிகா மோகனன்!

  • November 8, 2020 / 11:44 AM IST

சமீபத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் “D43” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்தி வந்துள்ளது.

தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. சில திரைப்படங்களை மட்டுமே நடித்திருந்தாலும் இவர் எட்டிய உயரம் அதிகம் என்று பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus