படு கவர்ச்சியான காஸ்டியூமில் ‘மாஸ்டர்’ ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

  • August 25, 2020 / 09:47 AM IST

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை ஒரு படம் தான் ரிலீஸாகி இருக்கிறது. இன்னொரு படம் இனிமேல் தான் வெளியாகவே போகிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன். ‘பேட்ட’ ஹிட்டிற்கு பிறகு இவரின் கால்ஷீட் டைரியில் இணைந்த ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா, விஜய்-க்கு ஜோடி என்பதால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்று கேரியரில் ஹைலைட்டான படமாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

malavika mohanan's hot photoshoot stills

ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார். தற்போது, மாளவிகா மோகனன் நடிப்பில் ஒரு தெலுங்கு படமும், ஒரு ஹிந்தி படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து மாளவிகா மோகனன் போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus