மாளவிகா மோகனனின் அக்கவுண்ட்டில் பிரச்சனையா- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • October 29, 2020 / 06:41 PM IST

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் விரைவில் அது சரி செய்யப்படும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus