வைபவ் – வாணி போஜன் நடிக்கும் காமெடி படம்… வெளியானது சூப்பரான மோஷன் போஸ்டர்!

  • May 10, 2021 / 10:55 AM IST

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய்’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம், பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கும் படம் என ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ராதாமோகன் இயக்கும் காமெடி படத்துக்கு ‘மலேஷியா டு அம்னீஷியா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் மயில்சாமி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் .கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதன் மோஷன் போஸ்டர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை வருகிற மே 28-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus