தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘தளபதி’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ரஜினியுடன் இணைந்து மலையாள ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி ‘தேவராஜ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, இப்படத்துக்காக நடிகர் மம்மூட்டி ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.