மாநாடு திரைப்பட நாயகியின் அசத்தல் சாகசம்!

2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியான “ஹீரோ” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் “மாநாடு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் விண்ணில் பறந்து சாகசம் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லாக்டவுனில் தளர்வு அறிவிக்கப்பட்டது முதல் பல ஹீரோயின்களும் சுற்றுலா சென்று தங்கள் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.