பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த மணிகண்டன்!

  • December 19, 2022 / 11:43 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 71 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று நான்காவது முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் மணிகண்டன்.

இந்த சீசன் உட்பட இது வரை நடந்த அனைத்து தமிழ் பிக் பாஸ் சீசன்களில் அதிகமாக மூன்று முறை மட்டுமே கேப்டனாக ஒரு நபர் இருந்துள்ளார். சினேகன், யாஷிக்கா , மைனா ( நடப்பு சீசன்) இந்த ரெக்கார்டை மணிகண்டன் உடைத்து புதிய சாதனை செய்துள்ளார்.

இவரது இந்த சாதனையை சமன் செய்ய அல்லது முறியடிக்க மைனாவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் மைனா மூன்று முறை கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus