5 நாட்களில் மணிகண்டனின் ‘குட் நைட்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • May 17, 2023 / 12:28 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘குட் நைட்’ கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus