‘குட் நைட்’ சேட்டிலைட் & டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

  • May 20, 2023 / 02:41 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘குட் நைட்’ கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஸ்டார் இந்தியா’ நிறுவனம் (சேட்டிலைட் – விஜய் டிவி, டிஜிட்டல் – டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்) ரூ.4 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus