மணிரத்தனம் எடுத்த புதிய அவதாரம் !

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களிள் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன்‌
படத்தை இயக்குவதாக அறிவித்தார். எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இந்த படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தில் ஜெயம்ரவி , கார்த்தி, விக்ரம் ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் .இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டது.

இந்நிலையில் மணிரத்தனம் பொன்னியின் செல்வன்‌படத்திற்காக
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் பாடல் வரிகளை எழுதி உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. பொதுவாக மணிரத்தனத்தின் படங்களுக்கு கவிப்பேரரசு தான் பாடல் எழுதுவார .ஆனால் சில காரணங்களால் இந்த படத்திற்கு பாடல் எழுத வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.