சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ (முதல் பாகம்) கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நாளை (ஏப்ரல் 28-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் “படம் நன்றாக இல்லை” என்று குறிப்பிட்டதுடன் 5-க்கு 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுத்துள்ளார்.