மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘சன் டிவி’?

  • September 17, 2022 / 11:02 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், முதல் பாகத்தை (PS – 1) வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ ரூ.25 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus