பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மனிஷா . பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் . அதனை தொடர்ந்து இந்தியன்,முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . தமிழிலும் இவருக்கு ரசிகர் இருந்தனர் . நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த மாப்பிளை படத்தில் நடித்து இருந்தார் .
2010- ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மனிஷா. தற்போது இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவகாரத்து பெற்று வாழ்ந்து வருகிறார் .
சமீபத்தில் மனிஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “விளையாட்டாக ஆரம்பித்த மதுப்பழக்கம், விரைவில் என்னை ஆக்கிரமித்துவிட்டது. மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு போய்விட்டேன். மதுவுக்கே முக்கியத்துவம் தந்தேன். இதனால் என் வாழ்க்கையே அழிந்து நாசமாகவிட்டது. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன். ஆகவே எவரும் மதுவைத் தொடாதீர்கள்” என்று தெரிவித்து இருக்கறார்