குழந்தையில் நடிகை மஞ்சிமா மோகன் இப்படித்தான் இருந்தாங்களாம்!

  • July 23, 2020 / 11:16 PM IST

தமிழில் தற்போது சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை மஞ்சிமா மோகன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

திருவனந்தபுரத்தில் பிறந்த இந்த அழகு பதுமை, 1990களிலேயே குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கி விட்டார். நடிகர் நிவின்பாலியுடன் “ஒரு வடக்கன் செல்பி” என்ற படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார்.

பின்பு நடிகர் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் வலம் வர தொடங்கினார். இதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியான “தேவராட்டம்” படத்தில் ஹீரோயினாக நடித்த மஞ்சிமா மோகன், தற்போது தமிழில் 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் மஞ்சிமா மோகன் இந்த படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

https://twitter.com/mohan_manjima/status/1286233284410712064?s=19

தற்போது லாக்டவுனில் தனது சமூக வலைத்தளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன், சிறுவயதில் தான் பரத நாட்டியம் ஆடிய போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களை வெளியிட்டு அவர் ” இந்த புகைப்படங்கள் என் லாக்டவுன் மனநிலையை முழுமையாக விவரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்
தற்போது இவை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus