அசுரன் படத்திற்கு இந்த காரணத்தினால் தான் நான் நடிக்கவில்லை !

  • January 6, 2023 / 09:44 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. படத்தின் காதாபாத்திர போஸ்டர் நேற்று வெளியான நிலையில் தற்போது துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது .

இந்நிலையில் துணிவு படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் தான் இப்படி துணிவு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் . அதில் அசுரன் படத்திற்கு பிறகு நிறைய கதாபாத்திரம் தமிழில் எனக்கு வந்தது அது அனைத்தும் அசுரன் கதாபாத்திரம் மாதிரியே இருந்தது அதனால் தமிழில் நடிப்பதை தவிர்த்து வந்தேன் . துணிவு படத்தின் கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்ட ஒரு பாத்திரம் அதனால் துணிவு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus