தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. இவரை பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். அந்த அளவிற்கு அதிக படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்து விட்டார்.
மனோபாலாவின் பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி வசனங்கள் தான் ஹைலைட்டாக இருக்கும். இவர் ஆரம்பத்தில் ‘ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரம்பரியம்’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிக்சர் ஹவுஸ்’ மூலம் ‘சதுரங்க வேட்டை, பாம்புசட்டை’ ஆகிய 2 படங்களை தயாரித்தார். இவர் தயாரிப்பில் உருவான புதிய படமான ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
கடந்த மே 3-ஆம் தேதி கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா (வயது 69) இயற்கை எய்தினார். தற்போது, மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மனோபாலாவுக்காக அவரது மகன் பாடல் பாடும் இவ்வீடியோ ரசிகர்களை கண் கலங்க வைத்து விடுகிறது.