நாடு முழுவதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டார்கள். மேலும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் படவாய்ப்புகள் இன்றி லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கிய நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் பக்கம் ரசிகர்களை இழுத்து வந்தார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் பட வாய்ப்புகளையும் தேடிக் கொண்டார்கள். ஆனால் புதுமையான விதமாக காமெடி நடிகர்களும் குணச்சித்திர நடிகர்களும் இந்த களத்தில் குதித்து போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருவது தற்போது நடைபெற்றுள்ளது.
அந்த வரிசையில் மனோபாலா, சித்தப்பு சரவணன், சென்ட்ராயன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது பிரபல குணச்சித்திர நடிகரான மன்சூர் அலிகான் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது மன்சூர் அலிகான்தானா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு படு மார்டனாக போஸ் கொடுத்துள்ளார் நம் பிரபல வில்லன் நடிகர்.