ஹாட் ஸ்டார் தயாரிக்கும் மாரி செல்வராஜ் படம் !

  • November 18, 2022 / 02:07 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ் . பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் . இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது . இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து இருந்தார் .

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன் . இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார் . சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுது . கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வருகிற படம் மாமன்னன் .

உதயநிதி நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் . நடிகர் வடிவேலு இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த படத்தை மாரி செல்வராஜ் ஒதுக்கிவிட்டு நடிகர் கலையரசன் அவர்களை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் அந்த படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் நேரடியாக அந்த படத்தை திரையரங்கில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus