Adhik Ravichandran : பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

  • December 15, 2023 / 12:39 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ் என 2 ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பிறகு சிலம்பரசனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, பிரபு தேவாவின் ‘பஹீரா’, விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கினார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் புதிய படத்தில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறார். இந்த படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

சமீபத்தில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே, குணால் என்பவரை திருமணம் செய்த ஐஸ்வர்யா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் – ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று (டிசம்பர் 15-ஆம் தேதி) நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus