பாலிவுட்டிலும் பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் மாஸ் காட்டப்போகும் அஜித்!

  • July 29, 2020 / 11:49 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘வலிமை’ படத்தை ஹிந்தி மொழியிலும் டப் செய்து ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் போனி கபூர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus