தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விஜய். இவர் இயக்குனநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு மேயாத மான் படத்தின் இயக்குனரான ரத்னகுமார் திரைக்கதை எழுதியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படவேலைகள் நின்றுள்ள நிலையில், இயக்குனர் ரத்னகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தைப் பற்றிய தகவல்களை கூறியுள்ளார்.அதில், முதல் மூன்று நாளில் விஜய்க்கு வேலை இல்லை டயலாக் இல்லை. இதனால் அவர் சமைப்பது பாட்டு கேட்பது விளையாடுவது என இருந்து வந்தார்.
பின்னர் நடிகர் விஜய் சேதுபதி படத்தில் வந்த பிறகுதான் சிறுசிறு காட்சிகள் கூட ஜாலியாக மாறியது. எதை விடுவது, எதை வெட்டுவது என தெரியாமல் இருந்தோம். படத்தின் நீளத்தை குறைப்பதற்காக சில காட்சிகளை மனமில்லாமல் வெட்ட வேண்டியதாயிற்று எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,இன்னும் பத்து நாட்கள் மட்டும் நேரம் கிடைத்திருந்தால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து முடிந்து சென்சாருக்கு அனுப்பி வைத்திருப்போம்.ஆனால் அதற்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்தும் வேலைகளும் கெட்டு விட்டது. இருந்தாலும் இப்படம் எப்போது வெளியானாலும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும். மேலும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத விஜயை இப்படத்தில் பார்க்கலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.