அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தளபதி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். உலகம் முழுக்க மிகப்பெரிய இரசிகர்கள் பட்டாளம் இவரிடம் உள்ளது. இவருடைய சுமாரான படங்கள் கூட வசூல் ரீதியாக வெற்றி பெறுவதுண்டு. அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்ஷி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் வருகின்ற பொங்களுக்கு வெளியாக இருக்கிறது.

 

அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை தொடரந்து நடிகர் விஜய்யின் படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாக பேசப்படுகிறது. இத 2019- ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தின் கதையாக எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர்கள் வெற்றிமாறன், மகிழ்திருமேணி, அருண் ரஜா காமராஜ் ஆகியோரின் கதையிலும் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.

இதனால் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் அடுத்த சில வருடங்கள் மிக முக்கிய பங்காற்றவுள்ளது என்பது கோலிவுட் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது.

Share.