சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌரி கிஷன். தமிழ் மொழியில் இவருக்கு அமைந்த முதல் படத்துக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து சூப்பர் ஹிட்டானது. அது தான் ’96’. இந்த படத்தில் சிறு வயது த்ரிஷாவாக வந்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கௌரி கிஷன்.
’96’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை கௌரி கிஷனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாள மொழியில் ‘மர்கம்கலி, அனுகிரகீதன் ஆண்டனி’, தெலுங்கு மொழியில் ‘ஜானு’, தமிழ் மொழியில் ‘மாஸ்டர், கர்ணன்’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக நடிகை கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அடையாரில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தபோது நானும், என்னுடன் படித்த சக மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.
This is with respect to the issues being brought to light in school environments which seem highly toxic and problematic!
It needs to change, NOW.
Please read the thread. #SpeakUpAgainstHarrasment
#HinduSchoolAdyar #PSBB @Chinmayi pic.twitter.com/QXsV784x6P— Gouri G Kishan (@Gourayy) May 25, 2021