லாக் டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்ட ‘மாஸ்டர்’ நடிகை… வைரலாகும் வீடியோ!

  • August 5, 2020 / 12:47 PM IST

பிரபல தொகுப்பாளினி டு நடிகை என தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவரின் சினிமா கேரியரில் ஹைலைட்டாக அமைந்த படங்கள் ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’. ‘கேம் ஓவர்’ படத்தில் வர்ஷா என்ற ரோலிலும், ‘ஆடை’ படத்தில் ‘ஜெனிஃபர்’ என்ற ரோலிலும் சூப்பராக நடித்திருந்தார் ரம்யா சுப்ரமணியன்.

இந்த இரண்டு படங்களுமே அவரின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்ததால், ரம்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக ரம்யாவின் கால்ஷீட் டைரியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இணைந்தது. இப்படம் வந்ததும் ரம்யாவின் கேரியர் கிராப் இன்னுமே அடுத்த லெவெலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ரம்யா சுப்ரமணியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செம மாஸான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரம்யா சிலம்பம் சுற்றியுள்ளார். இவ்வீடியோவுக்கு கேப்ஷனாக “இந்த மாதம் சிலம்பம் கற்றுக் கொண்டேன். இது எனக்கு நானே கொடுத்த கிஃப்ட். மேலும், தமிழ் ஹீரோக்கள் மீது ஒரு பெரிய மரியாதை வந்துள்ளது. இதை எப்படி நீங்கள் செய்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus