விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் எப்போது ரிலீஸாகும் என பிரபல தியேட்டர் நிர்வாக உரிமையாளர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போயுள்ளன.அதிலும் குறிப்பாக மாஸ்டர், சூரரைப்போற்று போன்ற பெரிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.
இரு நடிகர்களின் படங்கள் ரிலீசாகாமல் போனது, ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எப்போதுதான் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் இந்த படங்கள் தீபாவளிக்கு வெளியாகவே வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
#Master & #SooraraiPottru are our only trump cards now that is going bring the crowd back to theatres !!! The production houses should take a very wise decision on the release which I personally feel is by Diwali 2020 only … https://t.co/45ttt9P8kA
— Rakesh Gowthaman (@VettriTheatres) May 12, 2020