சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதையடுத்து தளபதி விஜய் நடிப்பில் கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.
இதனையடுத்து விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படக்குழுவினர் இந்த லாக்டவுனில் எவ்வாறு தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று அப்படத்தில் பணியாற்றியவர்களின் கார்ட்டுன்களை ஒரே வீட்டில் இருப்பது போல் வரைந்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் ஆண்கள் விளையாடுவது, பாட்டு கேட்பது போன்றும் மாளவிகா சமைப்பது போன்றும் சித்தரிக்கபட்டிருந்தது. இதைக்கண்ட மாளவிகா மோகனன் பெண்களுக்கு கார்ட்டூன் உலகத்தில் கூட சமைப்பது மட்டும் தான் வேலையயா? என்றுதான் இந்த ஏற்றதாழ்வு மாறுமோ என்று தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை விஜய் ரசிகர்கள் டிரோல் செய்ததால் தனது டிவீட்டை டெலீட் செய்துவிட்டார்.
இந்நிலையில் மாளவிகாவின் ட்வீட் அதற்கு வைரலாகி விட விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரையே ரீடிசைன் செய்து விட்டனர்.