மாஸ்டர் மாளவிகாவின் அசத்தல் ரேஸ் பைக் ரைட்..!(வீடியோ)

  • April 21, 2020 / 01:57 PM IST

பேட்ட படத்தில் துணைநடிகையாக அறிமுகமாகி மாஸ்டரில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனனின் அசத்தல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹீரோயினாக ஒரு படம் தான்… அந்த படமும் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் ஹீரோயினின் புகழ் சமூக வலைதளத்தில் உச்சியில் உள்ளது. அதுவேறு யாருமில்லை நம்ம மாஸ்டர் மாளவிகா தான். பேட்ட படத்தில் துணை நடிகையாக மாளவிகா நடித்த போது, அவர் இவ்வளவு அழகு என்பது யாருக்கும் தெரியாது. அதுவும் அவரை விட வயது அதிகமான பையனுக்கு அவர் அம்மாவாக நடித்தது தான் அதில் கொடுமையின் உச்சம்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதிலிருந்து சமூகவலைதளங்கள் அனைத்தும் இவரின் போட்டோகளே நிரம்பி வழிந்தன.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ரேஸ் பைக் ஓட்டுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோலிவுட்டில் ரேஸ் பைக் என்றாலே அஜித் என்ற நிலையில் ரேஸ் பைக்கை ஹீரோயின் மாளவிகா அசால்டாக ஓட்டும் காட்சி அடங்கிய இந்த வீடியோவை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் வேகமாக சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா நடித்துள்ள டீச்சர் கதாபாத்திரம் குறித்து பேசும் படக்குழுவினர், படம் வெளியானால் போதும், மலர் டீச்சர், மாயா டீச்சர், ஜெனிஃபர் டீச்சர் என எல்லா டீச்சரையும் ரசிகர்கள் மறந்துப்போய் விடுவார்கள் என்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus