மாஸ்டர் படம் பற்றி வெளிவராத சுவாரஸ்ய தகவல்!

  • July 2, 2020 / 01:45 PM IST

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் காட்சிகளை சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப்படத்தில் தளபதிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் விஜய் சேதுபதி முழு வில்லனாக நடித்துள்ளாரா இல்லை ஒரு சாராரை மட்டும் ஆதரிக்கும் வில்லனாக நடித்துள்ளாரா போன்ற கேள்விகள் மக்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில் தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் மனசாட்சி இல்லாத கொடூரமான வில்லன் “பவானியாக” நடித்துள்ளார் என்று செய்தியை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படம் எப்போது வெளிவரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு சுவாரசியமான தகவலாக உள்ளது.

படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டு போகும் நிலையில், இப்படி ஒவ்வொரு ரகசியமாக வெளிவருவது படக்குழுவிற்கு அதிர்ச்சியாக அமைகிறதாம்! இதனால் கூடிய விரைவில் மாஸ்டர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus